Advertisement
Payanangal Mudivathillai (1982)
Cast:Mohan,Poornima Jayaram,Poornam Viswanathan,Rajesh,S.V.Sekar,T.K.S.Chandran,Rajani
Director : R.Sundarrajan
Producer:P.Muthusami & RElanjchezhian
Music :"Isaignani" Illiayaraja
Track Info :
01.Raaga Theepam - 04:24 SPBalasubramaniam : Download
பாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் மோகன் மேடையில் பாட முதன்முதலில் வாய்ப்பு கிடைத்ததும் படு உற்சாகமாக வர, அந்நேரம் பார்த்து மழை கொட்டோ கொட்டென்று கொட்ட கூடியிருக்கும் மக்களெல்லாம் கலைந்து சென்று விடுவார்கள். முதன்முதலாகக் கிடைத்த வாய்ப்பு இப்படிக் கைநழுவிப் போகிறதே என்று நொந்து போகும் மோகன் மழையில் நனைந்தபடியே மைக்கைப் பிடித்து (ஷாக் அடிக்காதோ?) கணீரென்று பாட, முதல் சரணம் முடிந்ததும் மழை விடத் தொடங்கி முற்றிலும் நின்றுவிட, "ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ" என்று ஆரம்பித்தவர், பின்பு ஆனந்தத்துடன் "ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது" என்று பாடுவார்.
அட்டகாசமான இசையினால் ராஜா அந்த மொத்த நிகழ்வையும் நம் மனக்கண்ணில் கொண்டுவந்து விடுவார். ஆரம்ப ஆலாபனையிலிருந்து பாடல் முழுதும் பாலு அனாயசமாகப் பாடியிருப்பதைக் கேட்டால் மழையடித்து ஓய்ந்தது போன்ற - காட்சியமைக்கப் பட்ட - உணர்வு வந்துவிடும்.
"வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ" என்று பாடுகையில் கோயில் மணி அடிக்கும். இம்மாதிரி காட்சிக்குப் பொருத்தமாக இசையமைப்பதில் ராஜா ராஜாதான்!
மழை நிற்கும்போது இரண்டாம் சரணம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு தனி வயலின் இசை ஒன்று வரும் கேளுங்கள். அப்படியே நம்மை உருக்கிவிடும்.
மோகனும் நன்றாகச் செய்திருப்பார். பிடித்த காட்சி முதல் சரணத்தை அவர் பாடி முடித்ததும் - அவரது குரலில் கவரப்பட்டு - மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கி நிற்கும் மக்களில் ஒருவர் கை நீட்டி மழை நின்றுவிட்டதா என்று - திரும்பவும் மேடையருகில் கூடி பாடலைக் கேட்பதற்காக - சோதிப்பது. சில நொடிகளே வந்தாலும் இன்றும் மனதில் நிற்கும் காட்சி அது.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா ஆ
எண்ணங்களோ அலை மோதுதம்மா - புது
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ
தேவி உன் கோவில் வாசல் முன்னாலே
காவியத் தேனென பூமியில் - முதன்முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்திலம்
அன்னை உன்னை வணங்கி இன்று
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய் - புது
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
02.Ilaya Nila Polikirathu - 04:39SPBalasubramaniam : Download
Play to watch Ilaya Nila Polikirathu video
03.Thokai Illamayil - 03:38 SPBalasubramaniam : Download
மயில் தோகை விரித்தாடுவதைக் "கேட்க" வேண்டுமா? இந்தப் பாடலின் ஆரம்ப இசையைக் கேட்டுப் பாருங்கள். புல்லாங்குழல் தோகையைச் சிலிர்க்கிறது.
அருமையான பாடல் வரிகள். இனிமையான இசை. தேன் போன்ற பாலுவின் குரல். மொத்தத்தில் இது ஒரு மயிற்பீலியிலிருந்து வரும் தென்றல்!
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமே இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
பூமியெங்கும் பூந்தோட்டம்
நாம் பாட வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
04.Vaikarayil Vaikai Karayil - 01:53 SPBalasubramaniam : Download
பயணங்கள் முடிவதில்லையில் வரும் இந்தச் சோகப்பாடல் எனக்குப் பிடித்தமான பாடல். அதிகபட்ச துன்பத்தில் உழலுபவனின் மனநிலையை எளிதாகக் கொண்டுவரும் அபாரமான மெட்டு, இசை, பாலுவின் குரல். குரல் நடுங்குவதைக் கூட அழகாகச் செய்திருப்பார் பாலு.
"நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே"
என்ற வரிகளை அவர் எப்படிப் பாடுகிறார் கேளுங்கள். அரைக் கண்ணில் மயங்கியிருப்பனின் உணர்வுகளை அப்படியே குரலில் கொண்டுவந்திருக்கிறார்.
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான்வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆஆஆஆஆஆஆஆ
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
ஆயிரமாயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ஆஆஆஆஆஆஆஆ
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான்வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
05.Yeh Aatha - 04:31 SPBalasubramaniam : Download
06.Saalaiyoram - 04:31 SPBalasubramaniam & SJanaki : Download
இது இன்னொரு அருமையான ஜோடிப் பாடல். பாலுவும் ஜானகியும் பாடியது. இசை லேசாக தென்றலே என்னைத் தொடு பாடலை நினைவுபடுத்துகிறது. பாலுவைப் போன்று ஜானகியும் நகாசு வேலை செய்திருக்கிறார் இந்தப் பாடலில். "குளிரெடுக்கும்" என்று அவர் பாடுவதைக் கேட்டால் குளிரெடுக்கிறது.
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
ஓ பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை தட்டும் வண்டுகள் தட்டுகின்றதே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழுததனால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
லாலலால லாலலால லலாலா லலாலலால
07.Mani Oosai Kettu - 04:37SPBalasubramaniam : Download
Play to watch Mani Oosai Kettu video
Watch Payanangal Mudivathillai Online
0 comments: