Advertisement
Paneer Pushpangal (1981)
Cast : Suresh,Snehtil,Jr.manohar,Moorthi,Pratap pothan,Archana
Director : Bharathi
Producer :Padmini
Track Info :
01.Aanantha Raagam - Dheepan Chakravathi & Uma Ramanan
பாடலை கேட்க
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
துள்ளி வரும் உள்ளங்களே தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் இன்பம் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
வெள்ளிமலை கோலங்களே அள்ளிக்கொண்ட மேகங்களே
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சந்தத்தின் பாவங்களே
கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழு
கட்டிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகாதோ
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
லாலால லாலா...லாலால...
வண்ண வண்ண எண்ணங்களும் வந்துவிழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
சேரும்போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்தமனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேக்கும் காலங்கள் ஆரம்பம்
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
லாலால லாலா...லாலால...
02.Kodai Kaalak Kaatre - Malaysia Vasudhevan
பாடலை கேட்க
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)
வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)
ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)
03.Poonthalir Aada - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
சிந்தும் பனிவாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சி எண்ணம் சுட்டதே
கோடிகளாசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலமிட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்
............பூந்தளிர் ஆட...............
பூமலர் சூடும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தனை பூஜை செயுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
..........பூந்தளிர் ஆட..........
04.Vengaya Sambarum - Jyothi Raman
பாடலை கேட்க
0 comments: