Advertisement
Rosaappo ravikkaikaari (1979)
Cast:Sivakumar,Deepa,HeranRamasamy,LooseMohan,Sathyaraj,
Sivachandran,Nagarathnammal
Director : Devaraj Mohan
Producer :Thirupur Mani
ரோசாப்பூ ரவிக்கைக் காரி (1979) படத்தை அப்பாவி சிவக்குமாருக்கு அழகான பட்டணத்துப் பெண் தீபா மனைவியாக வர, கிராமத்துக்கு பளீரென்று அழகாக வலம் வரும் தீபாவை பலர் கண் வைக்க, தீபாவும் வழி தவறிப் போவார் என்பது போன்ற கதை.அந்த கிராமத்தில் யாரும் 'லவுக்கையே' அணிவதில்லை. பட்டணத்திலிருந்து தீபா கொண்டுவந்து கொடுக்கும் உள்ளாடையை 'லவுக்கை'க்கு மேலே போட்டுக்கொண்டு (சூப்பர் வுமன்?) அழகு பார்க்கும் கிராமத்துப் பெண்மணிகள் வெட்கப்படும் காட்சி சரியான காமெடி.வெகுளி சிவகுமார் வெளியூருக்குச் சென்று ஏகப்பட்ட சாமான்களை மற்றவர்களுக்காக வாங்கிக்கொண்டு வரும் வேலையைச் செய்வார். புறப்படுகையில் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி வாங்கி வரச் சொல்வதை சுவாரஸ்யமான பாட்டாக "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ" மலேசியா பாடியிருப்பார். கிராமத்து மணம் கமழும் பாடல்கள் இளையராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. "மாமன் ஒரு நா மல்லியப் பூ கொடுத்தான்" என்ற பாடலும் இருக்கிறது. வாணி ஜெயராம் பாடியிருக்கும் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்" ஒரு அற்புதமான பாடல்.
Track Info :
01.Enullil Engo Aengum Geetham - Vani Jairam
பாடலை கேட்க
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க...பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்
ஆஆ ஆஆ...ஆஆஆஆ ஆஆ
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே சேராதோ
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
மஞ்சளை பூசிய மேகங்களே
மேகங்களே...மோகங்களே
மல்லிகை மாலைகளே
ஆஆ ஆஆ...ஆஆஆஆ ஆஆ
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே
என்றும் என்னை கூடாயோ
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
02.Maaman Oru Naal - SPBalasubramaniam & SPSailaja
பாடலை கேட்க
03.Uchchi Vahuntheduththu - SPBalasubramaniam
பாலுவின் இந்தத் தனிப்பாடல் மிகவும் அருமையாக இருக்கும். நொந்த உள்ளத்தின் உணர்வுகளைத் தனது குரலில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் மனிதர்.
பாடலை கேட்க
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
04.Veththala Veththala - Malaysia Vasudhevan
பாடலை கேட்க
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
வண்டிசோலை செம்ம்பட்டை நான்
வித்து வாறேன் உன்கிட்டதான்
ஏல சோதா பயலே சோரா நடந்து வாடா முன்னால
எட்டு வச்சி வாடா முன்னால
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
கேட்டாங்க கேட்டாங்க என்னன்ன கேட்டாங்க
கேட்டாங்க கேட்டாங்க என்னன்ன கேட்டாங்க
பாட்டியும் ஏலக்கா வேணும்ன்னு கேட்டாங்க
பத்தமடை பாய் வேணும்ம்னு கேட்டாங்க
சின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி
வாங்கி வரும்படி கேட்டாங்க
? என் ஊருக்கு விரசா தூரம் போணும்
வெகு தூரம் நடக்கணும் வேகமா வாடா
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க
போண்டாட்டி கட்டிக்க வேணும்ன்னு சொன்னாங்க
முன்னாடி கூட்டிட்டு வாடான்னு சொன்னாங்க
கல்யாணம் செஞ்ச அன்னைக்கு ராத்திரி
ஆசி வாங்கணும் என்னான்ங்க
நெசமாக வருவேங்க
நெசமாக வருவேங்க வயசான மனுசன்ங்க
வாயால மனசாற வாழ்தணும் நீங்க
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க
இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க
ஏழுதோலானுக்கு பாதாமும் பிச்தாவும்
மூணுதோலானுக்கு முந்திரி திராட்சையும்
வாங்கிட்டு வாடா தின்னுட்டு போடா
வந்திடும் வீரம் உனக்கு என்னாங்க
நான் திங்க போறேன் அப்புறம் பாரு
நம்மூரு காளைய முட்டி பாக்க போறேன்
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
வண்டிசோலை செம்ம்பட்டை நான்
வித்து வாறேன் உன்கிட்டதான்
ஏல சோதா பயலே சோரா நடந்து வாடா முன்னால
எட்டு வச்சி வாடா முன்னால
வெத்தலை வெத்தலை வெத்தலையோ
கொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ
Watch Rosaappo ravikkaikaari Online
4 comments:
-
memang website yang keren memang harus begini,selalu mengedepankan kepuasan dan banyak memberi manfaat bagi pengunjungnya. minimalist home design
-
all of which served to make me salute, this site is full of helpful information and news that, hopefully with the frequently updated to make this cara memperbesar penis website more useful lagi..thx
-
terimakasih, website price Kawasaki Z800 ini telah memberikan strret fighter honda ilmu pengetahuan yang kawasaki cruiser sangat bermanfaat untuk saya dan yang lain
memang website yang keren memang harus home design and decorating ideas begini,selalu specifications car and motorcycle mengedepankan kepuasan dan banyak memberi manfaat bagi pengunjungnya. price and specifications