Advertisement
Annai Oru Aalayam (1979)
Cast : Rajinikanth,Sripriya,Anjali Devi'Asokan,Gopu,Justin,Mahendran,Jayamalini,Mogan Babu,Nagesh,Suruli Rajan,Thengai Seenivasan
Director : R.Thyagarajan
Producer :C.Dhandapani
மிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உண்டு என்பதை சித்தரிக்கும் கதை. இதில், வேட்டைக்காரராக ரஜினி நடித்திருந்தார். காட்டுக்குள் தைரியமாகச் சென்று, மிருகங்களைப் பிடித்து அவற்றை சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்பது அவரது வேலை.தாயிடம் இருந்து குட்டி மிருகங்களை தந்திரமாகப் பிடித்து விற்பனை செய்து விடுவார்.
இப்படி தாய் மிருகங்களிடம் இருந்து குட்டிகளைப் பிரிப்பது அவர் அம்மா அஞ்சலிதேவிக்குப் பிடிக்கவில்லை. அவர் ரஜினியிடம், "மிருகங்களுக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால், தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்காதே'' என்று கேட்டுக்கொள்வார்.
ரஜினியோ, "மிருகங்களுக்காவது, தாய்ப்பாசமாவது!'' என்று சிரித்துக்கொண்டு போய்விடுவார்.
இந்நிலையில், ஒரு தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து, சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுவார். விஷயம் தெரிந்ததும், "உன் தாயை பிரியும்போதுதான் அந்த வேதனை உனக்குத் தெரியும்'' என்று ரஜினியிடம் கூறுவார், அஞ்சலிதேவி.
சில நாட்களிலேயே அப்படியொரு விபரீதம் நடக்கிறது. காட்டில் மகனைத் தேடிவந்த தாயாரை, ஏற்கனவே குட்டியை பிரிந்த சோகத்தில் இருந்த தாய் யானை துரத்துகிறது. தாயின் கூக்குரல் கேட்டு ரஜினி தாயைக் காப்பாற்ற ஓடிவருவார். வரும் வழியில் மிருகங்களை பிடிக்க வைத்திருந்த `பொறி'யில் மாட்டிக்கொள்வார்.
அவரது கண்ணெதிரிலேயே அஞ்சலிதேவியை தன் துதிக்கையால் தூக்கி வீசியெறிகிறது, யானை. மரணத் தறுவாயில் அஞ்சலிதேவி, "மகனே! இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு!'' என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.
தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய குட்டி யானையை விற்ற சர்க்கஸ் கம்பெனிக்கு ஓடுவார், ரஜினி. ஆனால் அதற்குள் அந்த குட்டி யானை வேறொரு சர்க்கஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் குட்டி யானை இருந்த கம்பெனியை தேடிப்போய் அதை மீட்கிறார்,ரஜினி.
ஆனால் குட்டி யானை, அவரைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடிக்கிறது. ரஜினியும் விடாமல் அதைப் பிடித்து, அதற்கு தான் எதிரி எல்ல என்பதை நம்ப வைக்கிறார். கடைசியில், அதை காட்டுக்கு அழைத்துச்சென்று தாய் யானையுடன் சேர்த்து வைக்கிறார். முடிவில் தாய் யானை, குட்டி யானை இரண்டும், துதிக்கையை தூக்கி ரஜினியை ஆசீர்வதித்து விட்டுப் போகும். அப்போது தன் தாயே தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மகிழ்வார், ரஜினி.
இந்தப் படத்தில் ரஜினி, யானைக்குட்டி சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளும் கலகலப்பானவை.
ரஜினியிடம் இருந்து தப்பி ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழையும் யானைக்குட்டி, அங்கே திரையில் `நல்ல நேரம்' படத்தில் யானைகள் வருகிற காட்சியை பார்த்து திரையை கிழிப்பது, பிறகு ரஜினி வந்து குட்டி யானையை அடக்குவது போன்ற காட்சிகளை குழந்தைகள் குதூகலமாக ரசித்தார்கள்.
இளையராஜா இசையில் "அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே'', "நதியோரம்'', "அம்மா நீ சுமந்த பிள்ளை'' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
இந்தப் படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார், ரஜினி.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே `டூப்' போட்டுக்கொள்ளுங்கள்'' என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்' கூறினார்.
ஆனால் ரஜினியோ, `டூப்' போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடந்து
போனார்.சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை கொண்டது அந்த சிறுத்தை. அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.
19-10-1979 அன்று "அன்னை ஓர் ஆலயம்'' வெளியாயிற்று. ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.
Source : RajiniFans.com
Track Info :
01.Ammaa Nee Sumantha- TMSoundharajan
பாடலை கேட்க
02.Appane Appane Pillaiyaar Appane - SPBalasubramaniam & PSushela
பாடலை கேட்க
Annai Oru Aalayam - Appane Appane by bearsurfer
03.Nilavu Neram Iravu Kaayum - PSushela
பாடலை கேட்க
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகை பள்ளி
இங்கே...அவனை அழைத்தேன்
வா...ரா...னோ...ஹா
நிலவு நேரம் இரவு காயும்
வான் கொண்ட நீலம் போலே
விழி கொண்ட நங்கை நானே
ஆடவா ஆட வா அழைத்தேன் வா
பூநகை தூவினாள் மேனகை
மோகம் அது வா...ரா...தோ...ஹா
நிலவு நேரம் இரவு காயும்
நாள்தோறும் காலை மாலை
அரங்கேறும் காமன் லீலை
நாடிவா நாடிகள் துடித்தேன் வா
ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம்
அந்தி பகல் தோன்றாதோ...ஹா
நிலவு நேரம் இரவு காயும்
காபூலின் திராட்சை மின்ன
கைகொண்டு கொய்தால் என்ன
காதலா காதலால் நான் வாட
ஓடை நான் ஓடம் நீ
ஓடி வா ஆசை அலை மோதாதோ...ஹா
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகை பள்ளி
இங்கே...அவனை அழைத்தேன் வாரானோ
04.Nanthavanththil Vantha Kuyile - SPBalasubramaniam
பாடலை கேட்க
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனதில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளை அழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளை அழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனதில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆசையிருந்தால் அச்சம் விடு நீ
தொடைநடுங்கும் பூங்கொடியே
புயலோடு குலவிட மலருக்குத் துணிவில்லையோ
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனதில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளை அழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக்கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று
காதல் நிலவும் கட்டில் உறவும்
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கென்ன பிறந்தவள் உனக்கிது சரிப்படுமா?
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனதில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளை அழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளை அழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
05.Nathiyoram - SPBalasubramaniam & PSushela
பாடலை கேட்க
நதியோரம் ..நதியோரம்
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல-நதியோரம்
நதியோரம் நதியோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல -நதியோரம்
வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு-ஓடுவதென்ன?
மலையை மூடுவதென்ன?
முகில் தானோ துகில் தானோ(2)
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள..
நானந்த ஆனந்தம் என் சொல்ல
தேயிலைத் தோட்டம் - நீ
தேவதையாட்டம் துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் - நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல
06.Malai Aruvi Mani Kuruvi Vaa - SPSailaja
பாடலை கேட்க
Watch Annai Oru Aalayam Online
0 comments: