Advertisement
Kavikkuyil (1977)
Cast : Rajnikant, Sivakumar, S.V.Subbiah, Sendhamarai, Samikannu, Jayangkondan, Sri Devi, Padapat Jayalakshmi, Lakshmi Sri, Premi, Vani.
Director : Devaraj & Mohan
Producer :S.P.Thamizharasi
Music :"Isaignani" Illiayaraja
Track Info :
01.Chinna Kannan (4.11)- Dr.Balamurali Krishna : Download
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் .....
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் .....
பாடலை கேட்க
02.Aayiram Kodi Kaalangalaaka (4.11)- Dr.Balamurali Krishna
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி...
காற்றினில் உயிராக கலந்தாடுவாய்
நீரினில் அலையாக நின்றாடுவாய்
மார்கழி மாத மலர்களில் ஆடும்
வாசமும் நீயே வண்ணமும் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி...
நாதமும் நீயே கீதமும் நீயே...ஆ
நாதமும் நீயே கீதமும் நீயே
நானிலம் காக்கும் பரந்தாமா
பார்க்கடல் அமுதாக வானவர் விருந்தாக
மூவுலகாளும் வேதம் நீயே
ஆயிரம் கோடி...
ஆத்மாவின் பொருளாக கீதையிலே
அருள் காட்டும் சுடர் வீசும் பாதையிலே
உலகினை நாளும் நல்வழியோட்டும்
சாரதி நீயே மாதவன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி...
03.Chinna Kannan (4.11)- SJanaki: Download
பாடலை கேட்க
04.Kaathal Oviyam Kanden (4.11)- Sujatha : Download
A beautiful ghazal type song. Great singing by Sujatha. This is one of Sujatha's earliest songs. I think it came around the same time as Gayathri (Kaalaip Paniyil).
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
(காதல் ஓவியம்..)
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
(காதல் ஓவியம்..)
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன
(காதல் ஓவியம்..)
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன
(காதல் ஓவியம்..)
பாடலை கேட்க
05.Kuyile Kavikkuyile (4.11)- SJanaki : Download
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இளமை சதிராடும் தோட்டம் காயும் கனி ஆனதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமையை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இது மோஹனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
பருவ செழுப்பினிலே பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இது யௌவனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச் சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
பாடலை கேட்க
06.Uthayam Varukindrathe (4.11)- SJanaki : Download
பாடலை கேட்க
07.Maanodum Paathaiyile (4.11)- PSushela : Download
பாடலை கேட்க
0 comments: