Advertisement
Naan Vazhavaipen (1979)
Cast : Sivaji Ganesan,K.R.Vijaya,Rajavelu,Jaiganesh,M.R.vasu,Major Sundarrajan,Poornam Viswanathan,Rajinikanth,Senthamarai,Thengai Seenivasan,V.K.Ramasami,Varadarajan,A.Sakunthala,Pushpamala,Raji,S.N.Parvathi
Director : D.Yoganand
Producer :K.R.Vijaya
நான் வாழவைப்பேன் என்ற திரைப்படம் 1979ஆம் ஆண்டு வெளிவந்தது. திரு.யோகனந்த் டைரக்சனில்,நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் செவாலியே சிவாஜி கணேஷன் அவர்கள் ரவீ என்ற கதாபாத்திரத்தில் ஊனமுற்ற தங்கைக்கு அண்ணணாகவும் ஒரு பயண முகவர் பணிமனை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளையில் இருக்கும் கட்டியால் சிறிது காலத்தில் இறந்து விடுவோம் என்று தெரிய வருவதும் குடும்பத்தை காப்பாற்ற இவர் எடுக்கும் முயற்சிகளும், ரஜினிகாந்த்தின் எதார்த்தமான நடிப்பும் திரைக்கதைக்கு வலுச்சேத்திருக்கும்.
1974ம் வருடம் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான மஜ்பூர் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம்.
Track Info :
01.Enthan Ponvanname- TMSoundharajan
பாடலை கேட்க
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமெ
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமெ
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா
மனம்தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால்தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம்தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமெ.. அன்பு பூவண்ணமெ..
நெஞ்சில் போராட்டமா.. கண்ணில் நீரொட்டமா
அதை நான் பார்க்கவா..
மனம்தான் தாங்குமா..
எந்தன் பொன்வண்ணமெ.. அன்பு பூவண்ணமெ
02.Ennodhe Paadungal- SPBalasubramaniam
பாடலை கேட்க
என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா
கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட
கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள் தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க
என்னோடு பாடுங்கள்....மோதுதம்மா
பூம்பிறைகள் வின்னில் இரண்டு
புகழும் ஒன்று கூடும் உண்டு
தேயாமல் எங்கும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னாள்
வார்த்தை ஒன்று மெல்லச்சொன்னாள்
நோய் பறந்து போகும் கண்ணா
நானம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்
என்னோடு பாடுங்கள்....மோதுதம்மா
Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day
Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day
03.Thirutheril varum Silaiyo- SPBalasubramaniam & PSushela
இந்த பாடலை நம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால் செவாலியே சிவாஜியே நம் காதருகே வந்து பாடி நடிப்பது போன்ற பிரம்மை தோன்றும். பாலுஜியின் குரலில் அந்த திருத்தேரில் வரும் சிலையோ வரிகள் தங்கத் தேரில் வரும் குரலோ என்று எண்ண வைக்கும்..ஒரு அருமையான மெலோடி பாடலை இப்போது கேட்டு ரசியுங்கள்
பாடலை கேட்க
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ
தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ..
04.Agayam Mele- KJJesudhas
பாடலை கேட்க
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான்தான் micheal
அட நீதான் my girl
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் என்க்கு ஆகாதம்மா
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான்தான் free bird
அடி நீதான் என் love bird
பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மிது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர் விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி
அடி கண்ணே என்னை கட்டிபிடி
பூங்கொடியே சிறு மாங்கனியே
உந்தன் கண்களில் ஆயிரம் காதல் கதை
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடு தான்
இந்த ராஜா உந்தன் பின்னோடு தான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான்தான் micheal
அடி நீதான் my girl
05.Enthan Ponvanname- PSushela
பாடலை கேட்க
3 comments:
-
terimkasih infonya, sangat bagus sekali, mudah di mengerti dan cara memperpanjang penis tetap selalu menjadi web yang bagus .. sukses yaaa :)
-
Info yang diberikan bagus sekali, semoga menjadi price and specifications berkah dan bermanfaat bagi kita semua
indeed a cool website like this must, always puts a lot of satisfaction and benefit its Simple Home Interior Design | Price And Specification Nissan Juke (NEW), Unique Cars and Luxury 2015 | Falling Flying Aeromobil Cars When Tested Try | Specifications and Price Honda NM4 Vultus visitors.