Advertisement
Murattu Kaalai (1980)
Cast : Rajinikanth,Rathi,Asokan,Jai Shankar,Suruli Rajan,Thengai Seenivasan,Sumalatha
Director : S.P.Muthuraman
Producer :M.Balasubramaniam & M.Kumaran
ரஜினிகாந்த் நடித்த முக்கிய படங்களில் ஒன்று "முரட்டுக்காளை.'' இதில் அவர் கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்தனர்.பட உலக நிலவரம் சரி இல்லாமல் இருந்ததால், ஏவி.எம். நிறுவனம் சில காலம் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 1980-ல் அவர்கள் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தனர். கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்தை ஒப்பந்தம் செய்தனர்.இதற்கான கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.வில்லன் ஜெய்சங்க
ஒரு கிராமத்தில், பண்ணையாருக்கும், ஏழை விவசாயிக்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. கிராமியக் கதையாக இருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களை நிறைய சேர்த்து படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்க ஏவி.எம். முடிவு செய்தது.
படத்தில் ஒரு புதுமையாக, ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டது. அதுவரை ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து, தமிழ்ப்பட உலகின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக ஜெய்சங்கர் திகழ்ந்து கொண்டிருந்தார்.
வில்லன் வேடத்தில் நடிக்க அவர் முதலில் தயங்கினார். எனினும், அவர் வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வலுவானதாகவும் இருந்ததால் நடிக்க சம்மதித்தார்.
இதில் விவசாயி காளையனாக ரஜினியும், பண்ணையார் மகனாக ஜெய்சங்கரும் நடித்தார்கள்.
பண்ணையாரின் முரட்டுக்காளையை காளையன் அடக்குவான். அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக பண்ணையார் அறிவிப்பார். ஆனால், காளையன் மறுத்து விடுவான்.
இந்த மோதல் காரணமாக அடுக்கடுக்காக நடைபெறும் சம்பவங்களால், படம் விறுவிறுப்பாக அமைந்தது.
படத்தின் உச்சகட்டமாக, ஓடுமë ரெயில் மீது ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் நடக்கும் சண்டை மயிர் கூச்செரியும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. பட அதிபர் ஏவி.எம்.சரவணன் உள்பட பலர் கேட்டுக்கொண்டும், ரஜினி `டூப்' போட்டுக்கொள்ள மறுத்து, சண்டைக் காட்சிகளில் அவரே துணிகரமாக நடித்தார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார். மற்றும் சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோரும் நடித்தனர்.
கதை, நடிப்பு, இசை அனைத்தும் சிறப்பாக அமைந்தன.
20-12-1980-ல் வெளிவந்த இந்தப்படம், 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.
Track Info :
01.Entha Poovilum Vaasam Undu - SJanaki
பாடலை கேட்க
02.Kodaanu Kodi - Malaysia Vasudhevan & SJanaki
பாடலை கேட்க
03.Maaman Machchaan - SPSailaja
பாடலை கேட்க
மாமன் மச்சான் ஹே . நீ தானோ
ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்
நாள் ஜாமம் எல்லம் உன்னைதான் எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் ?
?தத்தை இவ பாக்க இரு கைகளிலே சேர்க்க
மொட்டவிழும் நேரம் புது மோகத்திலே வாடும்
வாடாமல் வாழ தோளோடு சேர
நீ வந்து பாரு ஓ ஓ.. ஹோய்
…….மாமன் மச்சான்……..
நான் பாடி பாடி வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான் உந்தன் ஜோடி
ரகசியத்தை சொல்வேன் உன்னை அதிசயத்தில் வைப்பென்
எதிரிகளை வெல்லும் ஒரு தந்திரமும் சொல்வேன்
நீ எந்தன் தெய்வம் நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம் . ஓ ஓ ஓ .ஹோய்
………..மாமன் மச்சான்………………
04.Pothuvaaka En Manasu Thangam - Malaysia Vasudhevan
பாடலை கேட்க
ஜே ... ஜேய்... அண்ணணுக்கு... ஜேய்.. அண்ணணுக்கு...
ஜேய்.. காளையனுக்கு ஜேய் காளையனுக்கு ஜேய்... ஜேய்ய்ய்ய்ய்...
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
தன்னானா தானா
தன தன்னானா... தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
முன்னால சீறுது மயில காள
பின்னால பாயுது மச்சக்காள
முன்னால சீறுது மயில காள
ஹா... பின்னால பாயுது மச்சக்காள
அடக்கி ஆளுது முரட்டு காள
முரட்டுக்காள... முரட்டுக்காள
நெஞ்சுக்குள் அச்சமில்ல
யாருக்கும் பயமும்மில்ல
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க... உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... ஹா
நல்லதே செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்
ஹா... ஹா.. ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி... புடவைய போத்தி
அண்ணன வாழ்த்தி பாடுங்களா
காளையன பாத்துப்புட்டா
ஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடி
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
கொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவ போட்டு பாருங்கடி... கும்மிஅடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
ஹா... தன்னானா தானா..
தன தன்னான தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே
05.Puthu Vannangal - SJanaki
பாடலை கேட்க
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை
இளந்தென்றலில் ஆடுது சேலை
செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது கேட்டு
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை
மண்ணிலே வளர்ந்த கொடி படர்வது மரத்திலடி
பொன்னிலே நனைந்தது போல் மலர்ந்தது வசந்தமடி
பிஞ்சிகள் காய்த்து கனிந்தாட
மொட்டுகள் பூத்து விரிந்தாட
கள்ளில் மயங்கும் வண்டுபோல்
சுவை கண்டு மயங்குது கண்விழி
உல்லாசம் பன்பாடி உற்சாகம் கொண்டாட
உள்ளத்தில் பொங்குது ஆசை
……… புது வண்ணங்கள்………..
அன்பிலே இணைந்த சிட்டு மறைந்தது கூட்டிலடி
ரெண்டிலே ஒன்றை கண்டேன் பிறந்தது நாணமடி
இன்று நான் மலர்ந்த பெண்ணானேன்
என்னவோ மயக்கம் கொண்டேனே
னெஞ்சில் நினைத்ததை சொல்லவா
அதை சொல்லத்தான் ஏங்குது பெண்மையே
ஒன்றோடு ஒன்றாக என்னளும் கொண்டாட
உள்ளத்தில் வந்தது ஆசை
……….புது வண்ணங்கள்…………
Watch Murattu Kaalai Online
actual information, all information which is helpful given once for all home design | house design | motor cycle