Advertisement
Guru (1980)
Cast : Kamalhasan,Sridevi,Ceylon Manohar,M.N.Nambiar,Major Sundarrajan,Mogan Babu,Muthuraman,Y.G.Mahendran,Pandari Bai,Vennira Aadai Nirmala
Director : I.V.Sasi
Producer :Prakash RC
வணிகரீதியாக வெற்றிபெற்ற சரியான மசாலா படம் குரு (1980). பலத்த பாதுகாப்பிலிருக்கும் தங்க மீனை தலை கீழாக வந்து எடுப்பது. முத்திரையாக கழுகு சின்னத்தை உபயோகப்படுத்துவது. அவனவன் ஜீப், கார் என்று ஆலாய் பறக்க குதிரையில் வந்து குற்றம் புரிந்து காணாமல் போவது என்று ஒரு ரீதியாகவே படத்தை எடுத்திருப்பார்கள். குதிரை என்பதால் காரைப் போல நம்பர் ப்ளேட், போலி நம்பர் ப்ளேட் என்று தொல்லைகள் இல்லை. ஆனால் அது விட்டை போட்டால் அதை வைத்து போலீஸ் நாய் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட முடியாதா என்று அப்போது யோசித்திருக்கிறேன்.
கமல், ஸ்ரீதேவி ஜோடியாக வந்து கலக்கிய பெருவெற்றிப் படங்களில் குருவும் ஒன்று. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் அதே நாயகன் கதைதான் குருவிலும். எந்த ஆங்கிலப் படத்தின் தழுவல் இது என்று தெரியவில்லை. ஐ.வி.சசி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வந்த படம்.
பழுப்பும் வெளுப்பும் கலந்த நிறத்திலிருக்கும் புரவியில் புழுதி பறக்க வருவார் கமல். சின்னப் பையன் குதிரையில் போவதைக் காட்டி தூரத்திலிருந்து குதிரை அருகில் வரும்போது பெரியவனாகி கமல் ஆகியிருப்பார். சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே குதிரை சவாரி செய்வார் கமல் (அவர் எதைத்தான் செய்யவில்லை?). படத்திற்கு ஒரு தீம் இசை வேறு படம் நெடுக வரும். நம்பியார், சிலோன் மனோகர் என்று வில்லன்கள். கமல் அறிமுகமாகம் காட்சியில் அட்டகாசமான ஆங்கிலத்தில் பிளந்துகட்டுவார் பாருங்கள். இதன் ஒளிக்கோப்பு யூட்யூபி்ல் இருக்கிறது.
Track Info :
01.Aadungal Paadungal - SJanaki
பாடலை கேட்க
02.Aadungal Paadungal - SPBalasubramaniam
படத்தில் பல பாடல்கள் அருமையானவை. அவற்றிலொன்று குழந்தைகளுடன் குரு பாடுவதாக வரும் இந்தப் பாடல். பாலுவின் குரலே வித்தியாசமாக இருக்கிறது கேட்பதற்கு.
குழந்தைகளிடம் 'நீ என்னவாகப் போறே?' என்று கமல் கேட்க, கலெக்ட்டர், டாக்டர், போலீஸ் என்று ஒவ்வொரு குழந்தையாகச் சொல்லிக்கொண்டே வர, ஒரு பையன் 'நான் குருவாகப் போறேன்' என்று சொல்வான். உடனே உணர்ச்சிவசப்பட்டு அப்பையனை அறைந்துவிடுவார் கமல். பிறகு அதை நினைத்து வருந்தி, தன் மீதே கோபத்துடன் ஜன்னல் கண்ணாடியை முஷ்டியால் குத்தி (நிஜமாகவே) உடைப்பார்.
குழந்தைகளோடு கோரஸ்ஸாக பாலு பாடிய இன்னொரு பாடல் (அதுவும் கமல் படத்தில்தான்) இன்னொரு பதிவில் பார்ப்போம் (ஏற்கெனவே கோவை ரவீ பதிந்திராத பட்சத்தில் :-)). இனி ஆடுங்கள் பாடுங்கள்!
பாடலை கேட்க
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா
தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா
கோபம் போலே வானங்கள்
பாபம் போலே வீசுங்கள்
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
முந்துங்கள் தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்
முந்துங்கள் ம்... தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்
கண்ணே பாப்பா தூங்காதே
காலம் உண்டு ஏங்காதே
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
03.Enthan Kannil Ezhu Uzhangal - SJanaki
பாடலை கேட்க
04.Maamanukku Paramakkudi - SJanaki
பாடலை கேட்க
05.Naan Vanagukiran - SJanaki
பாடலை கேட்க
06.Paranthalum Vida Maatten - SPBalasubramaniam & SJanaki
ஸ்ரீதேவியும் கோயான் கோபுவும் ஹெலிகாப்டரில் வர, மஞ்சள் நிற சிறிய விமானத்தில் ஹெலிகாப்டரை கமல் சுற்றிச் சுற்றி வர, இருவரும் போட்டிப்பாடலாகப் பாடிக்கொள்ளும் இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். வாகனத்தை மாற்றியிருந்தால் சுற்றி வருவது சிரமம். ஹெலிகாப்டராக இருக்கப் போய் அந்தரத்தில் நின்று கொள்ள கமல் சுற்றி வர வசதியாக இருந்தது! ஸ்ரீதேவி 'பறக்காதே' என்று எசப்பாட்டை ஆரம்பித்ததும் அருகில் இருக்கும் கோயான் கோபு அவரை எதற்காக முறைத்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!
இனி காற்றில் பறப்பது போன்ற இந்த இனிய பாடலைக் கேளுங்கள்!
Hey My Dear, Look here, here I say huh
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Senyorita, How do you feel about me now I say? hahaha
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
Hey, let me see what you can do!
wow..
நதியிருக்கு தலை குளிக்க
விதியிருக்கு மணம்முடிக்க
இணங்கிவிட்டால் சுகமிருக்கு
இதயத்திலே இடமிருக்கு.. ஹ.
தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
விதிவழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டிவைக்க
பாவையல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Baby, Hey Baby, How do you feel about me now huh?
பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விடமாட்டேன்
07.Perai Sollava - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
இடையொரு கொடி இதழொரு கனி
இன்ப லோகமே உன் கண்கள்தானடி
மலரெனும் முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பபபபபா பபபபபபாபா
புதுமழையிது சுவைதருமது
வைரப் பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது கனிந்தது அது
இளமையென்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
பபபபபா பபபபபபாபா
நவமணி ரதம் நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலையுந்தன்வசம்
கங்கையாறுபோல் இனி பொங்குமங்களம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை
நம் இருவர் கையிலே
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
லாலாலலா லாலாலலா
பபபபபா பபபபபபபா
Watch Guru Online
0 comments: